டிராவில் முடிந்த ஆட்டம்!

லங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறுள்ளது. இதில், காலே நகரில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 1 – 0 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தலைநகர் கொழும்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் தொடங்கி நடைபெற்றது. 

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் ஆடியது. தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் – கே.எல். ராகுல் ஜோடி களமிறங்கிய நிலையில், இதில், தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் 45 ரன்னுக்கும், கே.எல். ராகுல் 18 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். இதன்பிறகு களத்தில் இருந்த தேவ்தத் படிக்கல் அரை சதம் விளாசி அசத்தினார். அவர் 168 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் சதம் விளாசியும் மிரட்டினார். இந்தத் தொடரில் அவர் விளாசும் 2-வது சதம் இதுவாகும்.

இதேபோல், சிறப்பாக ஆடி வந்த கேப்டன் சுப்மான் கில் அரை சதம் விளாசினார். அவர் 108 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்திருந்தபோது, நிரோஷனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 3 ரன்கள் எடுத்தபோது ரிட்டையர்ட் ஹர்ட் ஆகினார். பின்னர் ரவீந்திர ஜடேஜாவுடன் படிக்கல் ஜோடி அமைத்து மட்டையைச் சுழற்றி வந்தார். அவர் 193 பந்துகளில் 12 பவுண்டரிகளை விரட்டி 117 ரன்கள் எடுத்தபோது, நுவந்தவின் பந்து வீச்சில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். 

இதேபோல், ஜடேஜா 43 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். துருவ் ஜூரெல் 7 ரன்னுடனும், சரண்ஷ் ஜெயின் 4 ரன்னுடனும் களத்தில் இருக்க, முதல் நாள் ஆட்ட நேர முடியில், 85 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்தியா 300 ரன்கள் எடுத்தது. இலங்கையின் அசித பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளும், லஹிரு குமரா ஒரு விக்கெட்டும், கேஷரா நுவந்த ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.  

2-வது நாள் ஆட்டம் – இந்தியா ஆதிக்கம்

திங்கள் கிழமை தொடங்கிய 2-வது நாள் ஆட்டத்திலும் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. 2-வது செஷன் முடிவில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அப்போது இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 475 ரன்கள் எடுத்திருந்தது. ஆட்டம் மீண்டும் தொடங்கிய போது இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 503 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. களத்தில் ஆடி வந்த துருவ் ஜூரெல் அபாரமாக விளையாடி சதம் அடித்து அசத்தினார். அவர் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 115 ரன்கள் எடுத்து இருந்தார். இதையடுத்து, இந்திய அணி 503 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.   

இலங்கை பேட்டிங் – முதல் இன்னிங்ஸ் 
 
தொடர்ந்து, இலங்கை அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக  லஹிரு உதாரா – கமில் மிஷார ஜோடி களம் புகுந்தனர். இதில் லஹிரு உதாரா 1 ரன்னுக்கும், அடுத்து வந்த  பிரபாத் ஜெயசூர்யா 2 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். 5 ரன்னுடன் கமில் மிஷார களத்தில் இருக்க 2-ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்  

3-வது நாள் ஆட்டம் – இலங்கை பேட்டிங் 

செவ்வாய்க் கிழமை தொடங்கிய 3-வது நாள் ஆட்டத்தில் இலங்கை தொடர்ந்து பேட்டிங் ஆடியது. களத்தில் கமில் மிஷாரா – பசிந்து சூரியபண்டார ஜோடி அமைக்க, இந்திய பவுலிங் தாக்குதல் தொடுத்தது. தாக்குப்பிடிக்க தடுமாறிய கமில் மிஷாரா 19 ரன்னில் அவுட் ஆனார். பிறகு இணைந்த கமிந்து மெண்டிஸ் – பசிந்து சூரியபண்டார ஜோடி தங்களது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இதில், 76 பசிந்து சூரியபண்டார அரைசதம் விளாசினார். 

அவருடன் ஜோடி அமைத்திருந்த கமிந்து மெண்டிஸ் 32 ரன்னுக்கு அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் தனஞ்சய டி சில்வா 8 ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த சோனல் தினுஷாவுடன் களத்தில் இருந்த பசிந்து சூரியபண்டார ஜோடி அமைத்தார். அரைசதம் விளாசி அசத்தலாக ஆடி வந்த அவர் 80 ரன்கள் எடுத்திருந்த போது ஜடேஜா சுழலில் சிக்கி போல்ட் அவுட் ஆனார். அடுத்து வந்த நிரோஷன் டிக்வெல்லா டக்-அவுட் ஆகி வெளியேறினார். கேஷர நுவந்த 18 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில், 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்தது. 

4-வது நாள் ஆட்டம் – இலங்கை ஆல்-அவுட் 

 புதன் கிழமை தொடங்கிய 4ம் நாள் ஆட்டத்தில் களத்தில் இருந்த இலங்கை அணியின் லஹிரு குமார – சோனல் தினுஷா ஜோடியில், லஹிரு குமார 12 ரன்னுக்கு அவுட் ஆனார். ஆனாலும் நிலைத்து நின்று ஆடிய சோனல் தினுஷா, சதம் விளாசி 103 ரன்கள் குவித்து அவுட் ஆனார். மொத்தமாக அனைத்து விக்கெட்டையும் இழந்த இலங்கை 290 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி இந்திய அணியை விட 213 ரன்கள் பின் தங்கிய நிலையில் இருந்ததால் பாலோ ஆன் ஆனது. சிறப்பாக பந்து வீசிய இந்திய வீரர்கள் பிரசித் கிருஷ்ணா, மனவ் சுதர் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பாலோ ஆன் – இலங்கை அணி பேட்டிங் 

இந்நிலையில், இலங்கை அணி 2-வது இன்னிங்சில் களமிறங்கி ஆடி வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய லஹிரு உதாரா – கமில் மிஷார ஜோடியில், லஹிரு உதாரா 3 ரன்னுக்கு அவுட் ஆகினார். 32 ரன்கள் எடுத்த கமில் மிஷார ஜடேஜா சுழலில் சிக்கி எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார். 

களத்தில் ஆடி வந்த பசிந்து சூரியபண்டார – கமிந்து மெண்டிஸ் ஜோடியில், இருவரும் அரைசதம் விளாசி தங்களது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வலுவான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இந்த ஜோடியை உடைக்க இந்திய பவுலர்கள் கடுமையாக முயற்சித்தனர். கடைசியில், 55 ரன்கள் எடுத்த கமிந்து மெண்டிஸ் விக்கெட்டை பிரசித் கிருஷ்ணா வீழ்த்தினார். அடுத்த வந்த வீரர்களில், கேப்டன் தனஞ்சய டி சில்வா 23 ரன்னில் அவுட் ஆனார். 

நீண்ட நேரம் இந்திய அணிக்கு குடைச்சல் கொடுத்து வந்த பசிந்து சூரியபண்டார 92 ரன்னில் அவுட் ஆனார். பிறகு வந்த நிரோஷன் டிக்வெல்லா 6 ரன்னுக்கு அவுட் ஆனார். சோனல் தினுஷா 7 ரன்னுடனும், கேஷர நுவந்த 3 ரன்னுடனும் களத்தில் இருக்க மழை காரணமாக போட்டி தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து கன மழை பெய்யவே 4-ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.  

5-ம் நாள் ஆட்டம் – இழுத்துப் பிடித்த இலங்கை; கோட்டை விட்ட இந்தியா 

வியாழக்கிழமை தொடங்கிய 5-ம் நாள் ஆட்டத்தில் களத்தில் இருந்த சோனல் தினுஷா – கேஷர நுவந்த ஜோடி சிறப்பாக மட்டையை சுழற்றி இந்திய பவுலர்களின் தாக்குதலை திறம்பட சமாளித்தனர். இதில் சோனல் தினுஷா 100 பந்துகளில் அரைசதம் விளாசினார். அதேநேரத்தில் 150 பந்துகளை எதிர்கொண்டு 46 ரன்கள் எடுத்த நிலையில் கேஷர நுவந்த அவுட் ஆனார். அடுத்து வந்த பிரபாத் ஜெயசூர்யா 28 பந்துகளில் 2 ரன் எடுத்து அவுட் ஆனார். 

பின்னர் இணைந்த சோனல் தினுஷா – லஹிரு குமார ஜோடியில், சோனல் தினுஷா 201 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். 90 பந்துகளை எதிர்கொண்டு தாக்குப் பிடித்த கேஷர நுவந்த 12 ரன்னுக்கு அவுட் ஆனார். 24 பந்துகளை சந்தித்த அசித்த பெர்னாண்டோ தனது ரன் கணக்கை தொடங்காமல் களத்தில் இருக்க, 264 பந்துகளில் 8 பவுண்டரிகள், 2 சிக்சருடன் 133 ரன்கள் எடுத்தார் சோனல் தினுஷா. அவர் முதல் இன்னிங்சில் சதம் விளாசி மிரட்டி இருந்த நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் அடித்து அசத்தினார். 

இந்திய பந்துவீச்சாளர்களுக்கு எதிராக மிகுந்த பொறுமையுடன் விளையாடி சோனல் தினுஷா, இந்த 2 சதங்கள் மூலம் ஒரே டெஸ்டின் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த இலங்கை வீரர்களின் அரிய பட்டியலில் அவர் இணைந்தார். இலங்கை அணி 2- வது இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 429 ரன்கள் எடுத்த போது 5-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்தியா இரண்டாவது டெஸ்ட்டில் வெற்றி பெற முடியாமல் போனாலும், தொடரில் முன்னிலை பெற்றிருந்ததால் 2 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்: 

இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், தேவ்தத் படிக்கல், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், சரண்ஷ் ஜெயின், மானவ் சுதர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா. 

இலங்கை: லஹிரு உதாரா, கமில் மிஷார, பசிந்து சூரியபண்டார, கமிந்து மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா (கேப்டன்), சோனல் தினுஷா, நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), கேஷர நுவந்த, பிரபாத் ஜெயசூர்யா, லஹிரு குமார, அசித்த பெர்னாண்டோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *