புதிய நூலை வெளியிட்டது எக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க்!

சென்னை:

எக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் நிறுவனம் சென்னையில், வென் ஆர்கனைசேஷன்ஸ் வின் – கவர்னன்ஸ், டிரஸ்ட் அண்ட் தி வேல்யூஸ் ஆஃப் எக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் என்ற ஆங்கில நூலை வெளியிட்டது. நிறுவனங்கள் எவ்வாறு நம்பிக்கையை, நிலையான மதிப்பை உருவாக்குகின்றன, மேலும், பின்னடைவுகளைத் தாண்டி நீண்ட காலத்திற்கு எவ்வாறு செயல்படுகின்றன என்பதற்கான காரணிகளை இந்நூல் ஆராய்கிறது. முதன்மை நிதி அதிகாரி (CFO), தொழில் மற்றும் தலைமைத்துவப் பயிற்சியாளர் (Business and Leadership Coach), எழுத்தாளர் (Author), பேச்சாளர் (Speaker) மற்றும் சுயாதீன இயக்குநருமாகிய (Independent Director) டாக்டர் CA சங்கீதா சங்கரன் சுமேஷ் (Dr CA Sangeeta Shankaran Sumesh) இந்நூலை எழுதியுள்ளார்.

எக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் (Equitas Small Finance Bank) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், நிறுவனருமாகிய திரு. பி. என். வாசுதேவனுடனான உரையாடல்கள் மூலம், எக்விடாஸ் நிறுவனத்தின் நல்லாளுமைப் பயணத்தை வாசகர்களுக்கு இந்நூல் அறிமுகப்படுத்துகிறது. நல்லாளுமை (Governance) என்பது விதிமுறைகள், ஒழுங்குமுறைகள் மற்றும் இணக்கத் தேவைகளின் (compliance requirements) தொகுப்பு என்ற வரையறைக்கு அப்பாற்பட்டு, நிறுவனங்கள் சிந்திக்கும் விதம், செயல்படும் விதம் மற்றும் முடிவுகளை எடுக்கும் விதம் ஆகியவற்றையும் இந்நூல் ஆராய்கிறது. குறிப்பாக, கடினமான முடிவுகள், மாறுபட்ட முன்னுரிமைகள் மற்றும் இடர்களை எதிர்கொள்ளும் சூழல்களில் இவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதை எடுத்துரைக்கிறது. இந்நூலின் மையக் கருத்தாக ஆளுமைக்கான ஃபிரேம்ஸ் அணுகுமுறை (Frames Approach to Governance) இடம் பெற்றுள்ளது. இதன் கீழ், எக்விடாஸ் நல்லாளுமையை வெவ்வேறு ஃபிரேம்களில் அணுகுகிறது.

ஒவ்வொரு ஃபிரேமிற்கும் ஏற்ற வெவ்வேறு செயல் திட்டங்களை உருவாக்குவதன் மூலம், மாறி வரும் சூழலுக்கு ஏற்ப இயங்கக்கூடிய ஒரு நெகிழ்வான நல்லாளுமை மாதிரியை உருவாக்க இந்த அணுகுமுறை ஊக்குவிக்கிறது. இயக்குனர்கள் வாரியமும் – நிர்வாகமும் கொண்டுள்ள ஒருங்கிணைப்பு (Board- management alignment), ஒழுங்குமுறை அமைப்புகளின் சிக்னல்களுக்கு ஏற்ப செயல்படுதல் (sensitivity to regulatory signals), இந்திய ரிசர்வ் வங்கியுடனான தொடர்பு (communication with the RBI), பிற நிறுவனங்களின் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளுதல் (learning from other mistakes), வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட நல்லாளுமை (customer-centric governance), வணிக மாடல் (business model), கடன் அபாயம் (credit risk), தொழில்நுட்பம் (technology), செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் (operational controls), முதலீட்டாளர் உறவுகள் (investor relationships), நெறிமுறை சார்ந்த தலைமைத்துவம் (ethical leadership) மற்றும் சமூகத்தின் மீதான தாக்கம் (impact on society) உள்ளிட்ட பல்வேறு நல்லாளுமைக்கான ஃபிரேம்களை இந்நூல் ஆராய்கிறது. எக்விடாஸ், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனமாக (Micro Finance Institution) இருந்த காலகட்டத்திலிருந்து, ஸ்மால் பைனான்ஸ் பேங்க் (Small Finance Bank) ஆக வளர்ச்சியடைந்தது வரையிலான பயணத்தில் இடம் பெற்ற அனுபவங்கள் மற்றும் முடிவுகளையும் திரு. வாசுதேவனுடனான உரையாடல்கள் மூலம் இந்நூல் பதிவு செய்கிறது.

இந்தப் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், நல்லாளுமை எவ்வாறு வணிக முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தின என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது. இந்நூல் குறித்து எக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்கின் நிர்வாக இயக்குநரும், நிறுவனருமாகிய திரு. பி. என். வாசுதேவன் கூறுகையில், “நல்லாளுமை என்பது ஒரு இலக்கை அடைவதல்ல, அது தொடர்ந்து நடைபெறும் பயணம். ஒரு நிறுவனம் வளர்ச்சியடையும் போது, அதன் நிர்வாகக் கட்டமைப்பும் அதற்கேற்ப வளர வேண்டும். பிரேம்ஸ் அணுகுமுறை, நல்லாளுமையைப் பல்வேறு கோணங்களில் அணுகவும், தொடர்ந்து நமக்கு நாமே சவால் விட்டுக் கொண்டு – மேலும் சிறப்பாகச் செயல்படவும் எங்களுக்கு உதவியுள்ளது. மாறிவரும் காலத்திற்கு ஏற்ப எங்களது நல்லாளுமை மாடலை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே செல்ல வேண்டும் என்பதே எங்களது நோக்கம்” என்றார். ஒரு நிறுவனம் எப்போது வெற்றி பெறுகிறது? ஒரு நிறுவனத்தின் வெற்றி என்பது வளர்ச்சி, லாபம் மற்றும் வணிகச் செயல்திறன் ஆகியவற்றில் மட்டுமே அடங்கியதா? அல்லது நிறுவன வெற்றி என்பது நம்பிக்கை, நேர்மை, பொறுப்பான தலைமைத்துவம், வாடிக்கையாளர்களின் நலன் மற்றும் சமூகத்திற்கு நீடித்த மதிப்பை உருவாக்கும் திறன் ஆகியவற்றையும் உள்ளடக்கியதா? என்ற கேள்வியையும் இந்நூல் ஆராய்கிறது.

வென் ஆர்கனைசேஷன்ஸ் வின் (When Organisations Win) நூலின் ஆசிரியர் டாக்டர் CA சங்கீதா சங்கரன் சுமேஷ் கூறுகையில்:

“ஆர்வத்தின் அடிப்படையிலேயே, எக்விடாஸ் உடனான எனது பயணம் தொடங்கியது. சில சிறிய அனுபவங்கள், இந்த நிறுவனத்தின் பின்னணியில் உள்ள நிர்வாகத் தத்துவம் குறித்து என்னை சிந்திக்க வைத்தன. இந்த நூலை எழுத எக்விடாஸ் என்னை அழைத்தபோது, திரு. வாசுதேவனுடனான உரையாடல்கள் மூலமாகவும், வங்கியின் நல்லாளுமையின் பயணத்தைப் புரிந்துகொள்வதன் மூலமாகவும் அந்த ஆர்வத்தை மேலும் ஆழமாக ஆராய்வதற்கான வாய்ப்பாக இதைப் பார்த்தேன். இதன் மூலம் உருவான பார்வை, நல்லாளுமையை வெறும் விதிமுறைகள் மற்றும் இணக்கமாகப் பார்க்காமல், முடிவுகள், மதிப்புகள் மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையில் அணுகுவதாக அமைந்தது. இந்தப் பயணத்தின் மூலம், ஒரு நிறுவனம் எடுக்கும் முடிவுகளில்தான், அதன் நல்லாளுமை உண்மையாக வெளிப்படுகிறது என்பதை நான் உணர்ந்தேன். குறிப்பாக, யாரும் கவனிக்காத நேரத்திலும் சரியானதைச் செய்வது என்பது எப்போதும் எளிதானதாக இருக்காது. வென் ஆர்கனைசேஷன்ஸ் வின் (When Organisations Win) என்னும் இந்த நூல், தலைவர்கள் நல்லாளுமையை ஒரு விரிவான கண்ணோட்டத்தில் அணுகவும், அது தங்களது சொந்த நிறுவனங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை சிந்திக்கவும் ஊக்குவிக்கிறது” என்றார்.

ஆச்சரியப்பட வைக்கும் நூல் (The WOW behind When Organisations Win) நிறுவனங்கள் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி, தங்களது பங்குதாரர்களின் நம்பிக்கையைப் பெறும்போது, அவை மக்களை வாவ் (WOW) என்று ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதே இந்நூலின் பின்னணியில் உள்ள கருத்தாகும். நல்லாளுமை, மதிப்புகள் மற்றும் பொறுப்பான தலைமைத்துவம் ஆகியவற்றைத் தொடர்ந்து தேர்ந்தெடுத்து செயல்படுத்தும்போது இது சாத்தியமாகிறது.

இந்த நூல், தொழில் நிறுவனத் தலைவர்கள், இயக்குனர்கள், சுயாதீன இயக்குநர்கள், வங்கியாளர்கள், முதலீட்டாளர்கள், மாணவர்கள், எதிர்காலத் தலைவர்கள் மற்றும் இணக்க விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு நிறுவன நல்லாளுமையைப் புரிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். எக்விடாஸ் நிறுவனத்தின் அனுபவம், ஒரு பயணமாகவும், ஒரு அணுகுமுறையாகவும் இந்நூலில் முன்வைக்கப்பட்டுள்ளது. இது நிறுவனங்கள் மற்றும் தலைவர்கள் தங்களது செயல்பாடுகளை சிந்திக்கவும், கேள்வி எழுப்பவும், கற்றுக்கொள்ளவும் உதவும் வகையில் அமைந்துள்ளது. “பயணம் இத்துடன் முடிவதில்லை. ஒவ்வொரு முடிவிலும், ஒவ்வொரு உரையாடலிலும், ஒவ்வொரு முறையும் சரியானதைத் தேர்ந்தெடுப்பதிலும் இந்தப் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்” என்று இந்நூல் நிறைவடைகிறது.

நூல் குறித்து:

தலைப்பு: WHEN ORGANISATIONS WIN Governance, Trust and the Values of Equitas Small Finance Bank

ஆசிரியர்: Dr CA Sangeeta Shankaran Sumesh வெளியீட்டாளர்: Notion Press வெளியிடப்பட்ட தேதி: 7 செப்டம்பர் 2026 கிடைக்கும் இடங்கள்: Amazon / Notion Press / பிற இணைய தளங்கள் ஆசிரியர் குறித்து: டாக்டர் CA சங்கீதா சங்கரன் சுமேஷ், முதன்மை நிதி அதிகாரி (CFO) பணியில் இருந்து தொழில் மற்றும் தலைமைத்துவப் பயிற்சியாளராக மாறியவர். எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் இயக்குனர்கள் குழுவில் சுயாதீன இயக்குநராகவும் செயல்பட்டு வருகிறார்.

30 ஆண்டுகளுக்கும் மேலான தொழில்முறை அனுபவம் கொண்ட இவர், நிறுவனங்களின் மூத்த தலைமைப் பொறுப்புகளில் பணியாற்றியதுடன், பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் இயக்குனர்கள் குழுவிலும் இடம்பெற்றுள்ளார். இவர் ஐந்து நூல்களை எழுதியுள்ளார். நிறுவனங்கள் மற்றும் தலைவர்களின் நோக்கம், செயல்திறன் மற்றும் லாபத்தை மேம்படுத்துவதற்காக அவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *