மீசைய முறுக்கு 2 விமர்சனம் MARK 3/5

பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், அவ்னி மூவிஸ் சார்பில், குஷ்பூ சுந்தர் தயாரிப்பில், ஹிப் ஹாப் ஆதி இயக்கத்தில் நடிகர்கள் ஹிப் ஹாப் ஆதி, கெடிகா சர்மா, நாசர், ரம்யா ரங்கநாதன், யோகி பாபு , சைத்ரா ஆச்சார் , பாபா பாஸ்கர், கருணாஸ் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் ‘மீசைய முறுக்கு 2 ‘. 2017 ஆம் ஆண்டு இதே குஷ்பு, ஹிப் ஹாப் ஆதி கூட்டணியில் மீசையை முறுக்கு முதல் பாகம் வந்தது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது.

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:

ராயபுரத்தில் கானா பாடும் தாஸ் தனது இசையின் மூலம் சாதித்து மாற்றத்தை ஏற்படுத்த நினைக்கிறார் (ஆதி). ஆதியின் தந்தை பாபா பாஸ்கர் டிரைவராக இருக்கிறார். 1970இல் கதை தொடங்குகிறது. அங்கிருந்து அப்படியே 2026 தற்காலத்திற்கு வந்தால் மிகப்பெரிய தனியிசைக் கலைஞனாகும் ஆசையுடன் முயற்சித்து வரும் ஆதி கெடிகா சர்மாவை சந்திக்கிறார். இருவருக்கும் காதல் ஏற்பட அதில் சில மோதல்களும் ஏற்படுகிறது. அது என்னவென்றால் தயாரிப்பாளர் மகனும் அதே பெண்ணை காதல் செய்கிறான்.

இரண்டு பேரும் கெடிகா சர்மா முன் நின்று இவர்கள் இருவரில் யாரை பிடிக்கும் என்று கேட்கப்படுகிறது. அதில் உள்ள அதிர்ச்சி என்னவென்றால் அவளோ ‘லெஸ்பியன்’ என்பது தெரிய வருகிறது. இந்த காதல் மோதல் காவல் நிலையம் வரை செல்கிறது. அப்போது அவரது தந்தையான பாபா பாஸ்கர் பழைய கதையை சொல்ல தொடங்குகிறார். அந்த கதை என்ன ? ஆதி இசையில் சாதித்தாரா? இல்லையா? என்பதே மீதி கதை…

ஆதி இசைக்காக முயற்சிக்கும் இளைஞனிலிருந்து கனவை துரத்தும் இடம் வரை அவரின் தவிப்பு பார்வையாளர்களையும் வந்தடைய மெனக்கெட்டிருக்கிறார். ஜென்ஸீ இளைஞனாக மட்டுமே இல்லாமல் தாஸ் , பஸ் டிரைவர் இவர்களின் பிளாஷ் பேக்குகளில் அந்த கேரக்டர்களாக, ஆதியே நடித்து இருக்கிறார். ஆரம்பத்தில் வெகு ஜன ஆடியன்ஸை கொஞ்சம் குழப்பும் என்றாலும் புரியும் போது அட என்று ஆச்சர்யப்பட வைக்கும் அந்த உத்தி சிறப்பு. TAMIL LIVE NEWS CINEMA REVIEW

கெடிகா சர்மாவின் கவர்ச்சி இளைஞர்களை ஈர்க்கும் காந்தம். இவர்களுடன் பாபா பாஸ்கர் மாஸ்டர், கருணாஸ், யோகிபாபு, நாசர், பகவதி, விஜய் வரதராஜ், ஹர்ஸத் கான் அனைவரும் கதாபாத்திரங்களுக்கு பொருந்திப் போயுள்ளனர். படம் முழுக்க பாட்டுகள் இருந்தாலும் ஆரா பத்துக்கு பத்து பாடலைத் தவிர மற்றவை எல்லாம் ஆதியின் பழைய ஜெராக்ஸ்கள்தான்.

முதல் பாதியிலேயே 4 பாடல்கள் அமைந்திருக்கின்றன. கேமரா, சண்டைக்காட்சிகள், படத்தொகுப்பு என அவரவர் தங்களது பணிகளை சரியாக செய்திருப்பது படத்திற்கு உதவியாக அமைந்துள்ளது.

முதல் பாதி சுமார்… இரண்டாம் பாதி கதையின் அர்த்தம்… யோகி பாபு காமெடி எதற்கு? என்று நினைக்க வைக்கிறது….

மொத்தத்தில் இந்த மீசைய முறுக்கு 2 குழப்பமான திருப்பம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *