பவி கிரியேஷன்ஸ் சார்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘பனிவிழும் இரவு’. அருண் கார்த்தி கதாநாயகனாகவும், எனாக்ஷி கங்குலி கதாநாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் செ.ரா. ராஜேஷ் இயக்கியுள்ளார். திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குநர் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டு, படத்தின் உருவாக்கம், கதைக்களம் மற்றும் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்துகொண்டனர்.
இந்நிகழ்வினில்,
‘தயாரிப்பாளர் சதா முருகன் பேசியதாவது:
“பனிவிழும் இரவு என்பது மாறுபட்ட, கவித்துவமான தலைப்பு. நான் ஒரு பாடலாசிரியரும் கூட. சமீபகாலமாக வெளியாகும் பல தமிழ்ப் படங்களுக்குத் தமிழின் அழகையும் பெருமையையும் தாங்கும் தலைப்புகள் அமைவதில்லை என்பது வருத்தமளிக்கிறது. அதனால், அனைவருக்கும் எளிதில் புரியக்கூடிய வகையில் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தோம். ஆண்டுதோறும் முன்னூறுக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகும் தமிழ் சினிமாவில், இதுவரை சொல்லப்படாத மாறுபட்ட கதைக்களத்தை இந்தப் படத்தின் மூலம் முன்வைத்திருக்கிறோம்”.
“ஒரு திரைப்படத்தை உருவாக்குவதை விட அதைத் திரையரங்குகளுக்குக் கொண்டு சென்று வெளியிடுவது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அந்தச் சவாலை ஏற்று ARK புரொடக்ஷன்ஸ் சார்பில் தனசேகர் மற்றும் சஞ்சய் ஆகியோர் எங்களுக்குப் பெரும் ஆதரவாக இருக்கிறார்கள். ‘பனிவிழும் இரவு’ திரைப்படத்தின் கதைக்களம் மிகவும் வித்தியாசமானது. படத்தின் ஆறாவது ரீல் தொடங்கும் வரையிலும் அதன் முடிவு என்னவாக இருக்கும் என்பதை ரசிகர்களால் கணிக்க முடியாது. அப்படியொரு சுவாரசியமான திரைக்கதையுடன் இப்படத்தை உருவாக்கியிருக்கிறோம்”.
“ஒரு திரைப்படத்தை உருவாக்கும்போது குறைந்தது நூறு குடும்பங்களாவது அதன் மூலம் வேலைவாய்ப்பையும் வருமானத்தையும் பெறுகிறார்கள். எனவே, எங்களைப் போன்ற சிறு முதலீட்டுத் தயாரிப்பாளர்களின் படைப்புகள் தரமாக இருக்கும்போது, ஊடக நண்பர்கள் தங்களுடைய விமர்சனங்கள் மூலமாக எங்களை ஊக்கப்படுத்த வேண்டும். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஆதரவு அளித்த அனைத்து ஊடக நண்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார்.
தயாரிப்பாளர் சிவசாமி பேசியதாவது:
ஒரு ஆசிரியர் ‘பனிவிழும் இரவு’ திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறார் என்றால், அந்தப் படத்தின் உள்ளடக்கம் எந்த அளவுக்குப் பக்குவமாக இருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். ஆசிரியராகப் பணியாற்றுவதுடன், இசையமைப்பாளராகவும் பாடலாசிரியராகவும் தன்னை இணைத்துக்கொண்டு இந்தப் படத்தைத் தயாரித்திருப்பது சிறப்பான விஷயம். இன்றைய தலைமுறைக்குத் தேவையான படமாக இது இருக்கும் என்று முழுமையாக நம்புகிறேன்.
ஒளிப்பதிவாளர் ஜெயக்குமார் அவர்களைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். ‘இன்ஸ்பெக்டர் சூர்யா’ படத்தில் அவர் பணியாற்றியபோது, ஒரு சிறிய குறை இருந்தாலும் அதைச் சரிசெய்யாமல் அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார். தனக்குத் திருப்தி ஏற்படும் வரை மீண்டும் படமாக்க வேண்டும் என்று கூறுவார். அப்படிப்பட்ட அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அவர் ஒளிப்பதிவு செய்துள்ள ‘பனிவிழும் இரவு’ படத்தைப் பார்க்க நானும் ஆவலாக இருக்கிறேன். இயக்குநர் ராஜேஷ் ஏற்கெனவே பல படங்களில் நடித்தும், இரண்டு படங்களை இயக்கியும் தனது திறமையை நிரூபித்திருக்கிறார். அவருடைய பணிகளையும் நேரில் பார்த்திருக்கிறேன். எனவே, இந்தப் படமும் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
திரை ஆர்வலர் கேபிள் சங்கர் பேசியதாவது:
இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட் திரைப்படங்களின் வெற்றி விகிதம் அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சுமார் 20 படங்களுக்கு மேல் வணிக ரீதியாகவும் லாபகரமாகவும் அமைந்துள்ளன. நல்ல திரைப்படங்களுக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமைகள் மூலமாகவும் சிறிய படங்கள் லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் சிறிய படங்களுக்கான வெற்றி விகிதம் அதிகமாக இருப்பது ஆரோக்கியமான விஷயம்.
‘பனிவிழும் இரவு’ படத்தின் கதாநாயகன் அருண் கார்த்தியைப் பாராட்ட வேண்டும். கதாநாயகனாக நடித்திருப்பதுடன், இப்படத்தின் உருவாக்கத்திலும் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். கதாநாயகன் என்ற பந்தா இல்லாமல், படக்குழுவினருடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றியிருப்பது பாராட்டுக்குரியது. அவரது அர்ப்பணிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக, படத்தின் உச்சக்கட்டத்திற்கு அருகில் அவரது நடிப்பு சிறப்பாகப் பேசப்படும் என்று நம்புகிறேன்.
ஒளிப்பதிவாளர் ஜெயக்குமார் தங்கவேல் பேசியதாவது:
மதுரையில் திருமணப் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றி வந்த நான், பின்னர் கேமரா மற்றும் படப்பிடிப்பு உபகரணங்களை வாடகைக்கு வழங்கும் தொழிலில் ஈடுபட்டேன். அதன் மூலமாகத் திரைத்துறையுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. சினிமாவில் நமக்கென ஒரு படைப்பை உருவாக்க வேண்டும் என்ற ஆசையில் ‘பனிவிழும் இரவு’ திரைப்படத்தின் பணியில் ஈடுபட்டேன்.
குறைந்த பட்ஜெட்டில் இப்படத்தை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். அதற்கு நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கினார்கள். குறிப்பாக, சேரன் ராஜ், சரவண சக்தி உள்ளிட்ட கலைஞர்கள் என் மீது நம்பிக்கை வைத்து, எந்தத் தயக்கமும் இல்லாமல் இப்படத்தில் பணியாற்றினார்கள். அவர்களுடைய ஆதரவு எனக்கு மிகுந்த ஊக்கத்தைக் கொடுத்தது.
‘பனிவிழும் இரவு’ படத்தின் கதைக்களத்தில் பல சுவாரசியமான அம்சங்களும் திருப்பங்களும் இருக்கின்றன. அவற்றை இப்போதே முழுமையாக வெளிப்படுத்த விரும்பவில்லை. படத்தைப் பார்க்கும்போது ரசிகர்களுக்குப் புதிய அனுபவம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
நடிகர் உறியடி சுருளி பேசியதாவது:
சிறிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படங்கள் வெற்றி பெறுவது மகிழ்ச்சியளிக்கும் விஷயம். எனது ‘உறியடி’ திரைப்படத்தின் மூலம் கிடைத்த அனுபவத்தைப் போல, ‘பனி விழும் இரவு’ படக்குழுவினருக்கும் நல்ல வெற்றி கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். சில நேரங்களில் வெற்றி தாமதமாகக் கிடைத்தாலும், அது சிறப்பான வெற்றியாக அமைய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு.
இந்தப் படத்தில் பணியாற்றிய அருண் கார்த்தி, ஓம் செல்வா மற்றும் சதா முருகன் ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். சிறிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றியடைய வேண்டும். அதற்கு ஊடக நண்பர்களான உங்களுடைய ஆதரவு மிகவும் முக்கியம். உங்கள் ஆதரவுடன் இப்படம் வெற்றிப் படமாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
திரை ஆர்வலர் கேபிள் சங்கர் பேசியதாவது:
இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட் திரைப்படங்களின் வெற்றி விகிதம் அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சுமார் 20 படங்களுக்கு மேல் வணிக ரீதியாகவும் லாபகரமாகவும் அமைந்துள்ளன. நல்ல திரைப்படங்களுக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமைகள் மூலமாகவும் சிறிய படங்கள் லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் சிறிய படங்களுக்கான வெற்றி விகிதம் அதிகமாக இருப்பது ஆரோக்கியமான விஷயம்.
‘பனிவிழும் இரவு’ படத்தின் கதாநாயகன் அருண் கார்த்தியைப் பாராட்ட வேண்டும். கதாநாயகனாக நடித்திருப்பதுடன், இப்படத்தின் உருவாக்கத்திலும் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். கதாநாயகன் என்ற பந்தா இல்லாமல், படக்குழுவினருடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றியிருப்பது பாராட்டுக்குரியது. அவரது அர்ப்பணிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக, படத்தின் உச்சக்கட்டத்திற்கு அருகில் அவரது நடிப்பு சிறப்பாகப் பேசப்படும் என்று நம்புகிறேன்.
நடிகர் கருப்பு நம்பியார் பேசியதாவது:
‘பனி விழும் இரவு’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான சதா முருகன் சார், ஜெயக்குமார் சார், செல்வா சார் மற்றும் விநியோகஸ்தர்களான சஞ்சய், தனசேகரன் சார் ஆகிய அனைவருக்கும் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியையும், மகிழ்ச்சியையும், லாபத்தையும் பெற்றுத் தர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
இந்தப் படத்தைப் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரும் மக்களிடம் நல்ல முறையில் கொண்டு சேர்த்து, படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும், கேபிள் சங்கர் சாருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இயக்குநர் சுரேஷ் பாபு பேசியதாவது:
இங்கு வந்திருக்கும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இங்கு இருப்பவர்களில் பலரும் எங்களுடைய இன்ஸ்பெக்டர் சூர்யா படக்குழுவைச் சேர்ந்தவர்கள் தான். குறிப்பாக, இந்தப் படத்தின் இயக்குநர் எனது நண்பரும், மச்சானுமான செ.ரா. ராஜேஷைப் பற்றிச் சொல்ல வேண்டும். முதலில் தயாரிப்பாளராகத்தான் அவர் இந்தப் படத்தில் இணைந்தார். நாங்கள் இருவரும் இணைந்து ஒரு படம் பண்ண வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். அதன்பிறகு, என்னுடைய இன்ஸ்பெக்டர் சூர்யா படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். அவர் ஒரு சிறந்த நடிகர்.
இரண்டு படங்களை முடித்துவிட்டு, இன்று இயக்குநராகத் தனது முதல் படத்தை வெளியிடும் நிலைக்கு வந்திருக்கிறார். அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்ததாக, சதா முருகன் சாரைப் பற்றிச் சொல்ல வேண்டும். அவரும் எங்களுடன் இணைந்து ஒரு படம் செய்ய வேண்டிய தயாரிப்பாளர். இன்று எங்கள் அனைவரும் ஒரு குழுவாக இணைந்து பனிவிழும் இரவு படத்தில் பணியாற்றியிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
அடுத்ததாக, இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் ஜெயக்குமார். நான் பல படங்களில் இணை இயக்குநராகவும் உதவி இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறேன். அந்த அனுபவத்தில், ஒரு திரைப்படத்துக்கு ஒளிப்பதிவாளர் எவ்வளவு முக்கியமானவர் என்பதை நன்றாக உணர்ந்திருக்கிறேன். ஒரு காட்சியைச் சிறப்பாக அமைப்பது, சரியான ஃபிரேமில் படமாக்குவது எனப் பல விஷயங்களில் ஒளிப்பதிவாளரின் பங்களிப்பு மிகவும் அவசியமானது.
கதாநாயகன் அருண் கார்த்தி பேசியதாவது:
அனைவருக்கும் வணக்கம். ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து, அந்தப் படம் வெளியாகும் இந்தத் தருணத்தில் நான் என்ன உணர்கிறேன் என்பதைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்த மேடையில் நான் பேசும்போது, “டான்” படத்தின் கிளைமாக்ஸில் வருவதுபோல, என் அப்பா எங்கோ ஒரு மூலையில் நின்று கொண்டு என்னைப் பெருமையுடனும் சந்தோஷத்துடனும் பார்த்துக் கொண்டிருப்பார் என்ற நம்பிக்கையோடு என் பேச்சைத் தொடங்குகிறேன். லவ் யூ பா, மிஸ் யூ பா! என்னுடைய பயணத்தைத் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை எனக்குத் துணையாக இருக்கும் என் அம்மா, தம்பி, சித்தி, சித்தப்பா, நண்பர்கள் என அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. பனிவிழும் இரவு திரைப்படம் உருவான கதையைச் சொல்ல வேண்டும் என்றால், முதலில் எனக்கு ஜே.கே. பிரதர் அவர்களைத்தான் தெரியும். அவருடன் ஏற்கெனவே ஒரு பயணத்தில் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். அவர்தான் இயக்குநர் ராஜேஷ் பிரதர் ஒரு த்ரில்லர் கதையை வைத்திருப்பதாகச் சொன்னார். கதையைப் படித்தவுடன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன்பிறகு பல விவாதங்கள், சந்தேகங்களுக்கான விளக்கங்கள் என எல்லாம் முடிந்து இந்தப் படத்தைத் தொடங்கினோம்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர், இசையமைப்பாளர் சதா முருகன் சார் பற்றிக் குறிப்பாகச் சொல்ல வேண்டும். நாங்கள் கொடைக்கானலில் படப்பிடிப்பு நடத்தினோம். சாதாரணமாக நகரத்தில் படப்பிடிப்பு நடத்துவதே சவாலான விஷயம். அப்படியிருக்கும்போது, கொடைக்கானலில் எத்தனையோ சிரமங்களை எதிர்பார்த்தோம். ஆனால், எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் சதா முருகன் சார் எங்களைச் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பார். அவருடைய நகைச்சுவை உணர்வு, எல்லோரையும் உற்சாகமாக வைத்திருக்கும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவருக்கு என் மனமார்ந்த நன்றி. அடுத்ததாக, ஜே.கே. பிரதர். ஒரு த்ரில்லர் படத்துக்கு ஒளிப்பதிவு மிகவும் முக்கியம். இயக்குநர் ராஜேஷ் சாரும் ஜே.கே. பிரதரும் இணைந்து எங்களைச் செல்லமாகப் படுத்திய பாடு இருக்கிறதே! கொடைக்கானல் பனிமூட்டத்தில் ஷாட் வேண்டும் என்று சொல்லி, எங்களை ஸ்வெட்டர், ஜெர்கின் எதுவும் இல்லாமல் எங்களுடைய காட்சிகளுக்கான உடைகளிலேயே நடிக்க வைப்பார்கள். அப்போது கஷ்டமாக இருந்தாலும், இறுதியாகப் படத்தின் காட்சிகளைப் பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
நாயகி எனாக்ஷி கங்குலி பேசியதாவது:
முதலில் இங்கு என்ன பேசுவது என்று கொஞ்சம் குழப்பமாக இருந்தது. இருந்தாலும், தமிழில் பேச வேண்டும் என்று ஒரு சிறிய உரையைத் தயாரித்திருக்கிறேன். தமிழில் எனக்கு முழுமையாகப் பேசத் தெரியாது. இதுவரை இந்தி, பெங்காலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தான் அதிகமாகப் பேசியிருக்கிறேன். இந்தப் படத்தில்கூட வசனங்கள் பேசும்போது எனக்கு உதவியாகத் தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்து பேசும் வாய்ப்பு இருந்தது. தமிழ் திரையுலகில் பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். இந்தப் படம் எனக்கு மிகவும் சிறப்பான அனுபவம்.
ஜே.கே. சார், உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தப் படம் முழுவதும் எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருந்தீர்கள். நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு என்னால் சிறப்பாகச் செய்திருக்க முடியும் என்று நம்புகிறேன். கதாநாயகன் அருண் ஒரு அற்புதமான சக நடிகர். படப்பிடிப்பின்போது எனக்குத் தேவையான உதவிகளைச் செய்ததுடன், என்னுடைய வசதி மற்றும் தேவைகள் குறித்தும் அக்கறையுடன் கவனித்துக்கொண்டார். அவருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
இந்தப் படத்தைத் தயாரித்து ஆதரவு கொடுத்த தயாரிப்பாளர் சாருக்கும் என் மனமார்ந்த நன்றி. கேபிள் சங்கர் சாருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் படத்துக்காக உழைத்த அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் அனைவருடனும் இணைந்து பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவம்.
இயக்குநர் செ.ரா. ராஜேஷ் பேசியதாவது:
என்னை ஈன்றெடுத்த என் தாய், தந்தையையும், என்னைக் கலை உலகத்துக்கு அழைத்து வந்த கலைத்தாயையும் வணங்கி, முதலில் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் படத்தை உருவாக்குவதற்குப் பல சிரமங்களைச் சந்தித்திருக்கிறோம். ஒரு திரைப்படத்தை எடுப்பதைவிட, அதை வெளியிடுவதற்காக நாங்கள் பட்ட கஷ்டங்கள் இன்னும் அதிகம். குறிப்பாக, கடந்த 30 நாட்களாக நாங்கள் அனுபவித்த சிரமங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அந்தச் சூழலில் எனக்குப் பக்கபலமாக இருந்த தயாரிப்பாளர் சதா முருகன் அண்ணனுக்கு முதலில் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் சினிமாவுக்கு ஒரு நடிகனாக வர வேண்டும் என்ற ஆசையில்தான் வந்தேன். இதுவரை சுமார் 15 சிறிய படங்களில் நடித்திருக்கிறேன்.
அவற்றில் சில வெளியாகியுள்ளன; சில படங்கள் இன்னும் வெளியாகாமல் இருக்கின்றன. நான் முதன்முதலில் சதா முருகன் அண்ணனிடம் சொன்ன கதை பகையாறு. அந்தப் படம் தற்போது வெளியீட்டுக்காகக் காத்திருக்கிறது. அதற்கிடையில், பனிவிழும் இரவு படத்தை உருவாக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தக் கதையைப் பற்றி நாங்கள் விவாதித்தபோது, இது எதிர்காலத்தில் நிஜமாகக்கூடிய ஒரு விஷயம் என்பதால், தாமதிக்காமல் படமாக்கலாம் என்று சதா முருகன் அண்ணன் ஊக்கமளித்தார். அவருக்கு மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். பனிவிழும் இரவு படத்தைப் பொறுத்தவரை, இது எங்களுடைய உழைப்பையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் முயற்சி. படத்தை உருவாக்கியதிலிருந்து வெளியீட்டுக்குக் கொண்டுவரும் வரை எங்களுக்கு உதவிய ஒவ்வொருவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக, பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஆதரவுதான் எங்களைப் போன்ற புதிய இயக்குநர்களுக்கு மிகப்பெரிய ஊக்கம். அனைவருக்கும் நன்றி, வணக்கம்! என்று கூறினார்.