எந்தவிதமான பழிவாங்கும் நடவடிக்கையும் இல்லை- அமைச்சர் நிர்மல்குமார்

கே.என். நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து கேள்வி எழுப்பியபோது, இதில் எந்தவிதமான பழிவாங்கும் நடவடிக்கையும் இல்லை என்றார். லஞ்ச ஒழிப்புத்துறையின் நடவடிக்கைகளில் தலையிடும் உரிமை யாருக்கும் கிடையாது என்றும், புகார்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர்தான் தெரிவிக்க வேண்டும் என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.

உதயநிதி கைது தொடர்பான கேள்விக்கு, பெண்களைப் பற்றி பொது மேடையில் தொடர்பில்லாமல் அவதூறாக பேசியதால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவித்தார். நேரு தொடர்பான லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கில் என்ன நடந்துள்ளது என்பது தனக்கு தெரியாது என்றும், அது குறித்து சம்பந்தப்பட்ட துறையினர்தான் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார். www.tamillive.news

திமுக மற்றும் அதிமுக இணைந்து செயல்படுவதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு, இரு கட்சிகளும் இணைந்து இருப்பது தற்போது தெரிகிறது என்றார். அதிமுகவும் திமுகவும் இணைந்து பாஜகவுடன் ஒரே கூட்டணியில் போட்டியிடும் வாய்ப்பும் உள்ளது என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *