கோல்ட் கால் திரைவிமர்சனம் MARK 3/5

தம்பிதுரை எத்துராஜ் இயக்கத்தில், நடிகர்கள் சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீ வைஷ்ணவ், கிருஷ்ணா விஜய், பாலாஜி, ஸ்ரீகாந்த், அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே, மேரி லிட்டி, கீர்த்தனா புல்கி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் ‘கோல்ட் கால்’

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:

நான்கு இளைஞர்களுக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் வேலை கிடைக்கிறது. அந்த கம்பெனியின் விதிகள் என்னவென்றால் ஒரே பகுதியில் நான்கு பேரும் வேலை பார்க்க கூடாது என்பது, ஆனால் ஒரு சூழ்நிலையால் நான்கு பேரும் ஒரே பகுதியில் வேலை பார்க்கும் சூழல் ஏற்படுகிறது. இது ஒருபுறம் இருக்க பெங்களூரில் 13 வயது சிறுவன் கடத்தப்படுகிறான்.

அந்த குடோனில் இந்த நால்வரும் உள்ளே போகும் நிலைமை ஏற்படுகிறது. இவர்களை பார்த்த அந்த மூன்று ரவுடிகள் நான்கு போரையும் கையை கட்டி அமரவைக்கின்றனர். சிறுவனை கடத்திய பழி இந்த நான்கு பேர் மீது விழுகிறது. போலீஸ் விசாரணையை தொடங்குகிறது. இந்த தகவல் செய்தி சேனலில் வர, கம்பெனி மேல் அதிகாரிகள் அப்ப எல்லாரும் ஒரே பகுதியில் தான் இருந்து வேலை செய்திருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. பிறகு சிறுவனின் கடத்தல் பழியில் இருந்து எப்படி தப்பித்தார்கள்? வேலை என்ன ஆனது? என்பது படத்தின் மீதி கதை…. https://tamillive.news/

படத்தின் மிக முக்கியமான பலம் அதன் பெங்களூரு களம். நகரத்தின் இயல்பான சூழலைப் பயன்படுத்தி கதை நகர்த்தப்பட்டிருப்பது படத்திற்கு தனித்துவமான தோற்றத்தைத் தருகிறது. குறிப்பாக, பெங்களூருவின் பன்மொழிச் சூழலைப் பிரதிபலிக்கும் வகையில் வெவ்வேறு மொழிப் பின்னணியைக் கொண்ட கதாபாத்திரங்களை உருவாக்கியிருப்பது ரசிக்க வைக்கிறது. இயக்குநர் தம்பிதுரை எத்துராஜ், கதையை நேரடியாகச் சொல்லாமல் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்து திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார். https://tamillive.news/

சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீ வைஷ்ணவ், கிருஷ்ணா விஜய், பாலாஜி, ஸ்ரீகாந்த், அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே, மேரி லிட்டி & கீர்த்தனா புல்கி கதையோடு பொருந்தி நடித்திருக்கிறார்கள். வேலை மீது அக்கறையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் தங்களால் சமாளிக்க முடியாத ஒரு பெரிய பிரச்சினைக்குள் சிக்கிக்கொள்ளும்போது ஏற்படும் குழப்பங்களே படத்தின் மைய கதை.

டப்பிங் பணியில் கவனம் தேவை…. கதையை இன்னும் சுருக்கமாக சொல்லியிருக்கலாம்….

மொத்தத்தில் இந்த ‘கோல்ட் கால்’ இலக்கு விற்பனையாளர்கள் பார்க்க வேண்டிய படம். https://tamillive.news/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *