சென்னை:
குழந்தை, இளவயது மற்றும் கட்டாயத் திருமணங்களை ஒழிப்பதற்கான சர்வதேச தினமாக நவம்பர் 27-ஆம் தேதியை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (UNGA) அறிவித்துள்ளதை முன்னிட்டு, குழந்தைத் திருமணத்திற்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஒருங்கிணைந்த சமூக நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் சிறப்பு தமிழ் பட்டிமன்றம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது.
இந்திய சமுதாய நல்வாழ்வு நிறுவனம் (ICWO) மற்றும் ஜஸ்ட் ரைட்ஸ் ஃபார் சில்ட்ரன் (JRC) இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த பட்டிமன்றம், சென்னை நிருபர்கள் சங்கம் (Madras Reporters’ Guild), ஓமந்தூரார் அரசு வளாகம், சேப்பாக்கம், இல் நடைபெற்றது. நாள்: 25 நவம்பர் 2026 (புதன்கிழமை), நேரம்: காலை 10.30 மணி முதல் மதியம் 01.00 மணி வரை.
சிறப்பு விருந்தினர்களாக:
திருமதி. புதுக்கோட்டை விஜயா – தலைவர், தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்
டாக்டர் P.M. நாயர், ஐ.பி.எஸ். (ஓய்வு) – சர்வதேச நிபுணர், மனிதக் கடத்தல் விவகாரங்கள்
திரு. H. நதர்ஷா மாலிம் – மாநில ஒருங்கிணைப்பாளர் – தமிழ்நாடு, இந்தியா சைல்டு புரொடெக்ஷன்
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
பட்டிமன்ற நடுவராக காப்பியக் கவிஞர் டாக்டர் பாகை. ஆர். கண்ணதாசன் செயல்பட்டார்.
பட்டிமன்ற அணிகள்:
அணி 1: பெற்றோர்கள் (Parents)
– திருமதி. காரைக்கால் யோகதர்ஷினி – விஜய் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற பட்டிமன்றப் பேச்சாளர்
– தேவக்கோட்டை திருமதி. ஆர். லட்சுமி நாராயணன் – சன் தொலைக்காட்சியின் கல்வியாளர் மாலை நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற பேச்சாளர்
அணி 2: மற்றவர்கள் (Others)
– பேராசிரியர் M. விஜயகுமார் – கலைஞர் தொலைக்காட்சியின் இலக்கியத் தென்றல் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர்
– டாக்டர் ஹேமலதா – பெண்ணியச் சிந்தனையாளர் மற்றும் மக்கள் மருத்துவர்
“பெற்றோரே குழந்தைகளின் முதல் பாதுகாவலர்கள், அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டாலே குழந்தைத் திருமணத்தை தடுக்க முடியும்” என்று பெற்றோர் அணியினரும், “ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை, ஊடகங்கள் என மற்றோரின் ஒருங்கிணைந்த செயல்பாடு இல்லாமல் இதை ஒழிக்க முடியாது” என்று மற்றோர் அணியினரும் வாதிட்டனர்.
இரு அணியினரின் வாதங்களும் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், சிந்தனையையும் ஏற்படுத்தியது.
குழந்தைத் திருமணத்திற்கு எதிராக நமது குரல்களை ஒன்றிணைத்து எழுப்புவோம் என்ற முழக்கத்துடன் பட்டிமன்றம் நிறைவடைந்தது.
ஏற்பாடு: A.J. ஹரிஹரன், செயலாளர் – ICWO, இந்திய சமுதாய நல்வாழ்வு நிறுவனம் (ICWO)