பிக்பாஸ் போட்டியாளர்கள் யார்?!

மிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘பிக்பாஸ் தமிழ்’ நிகழ்ச்சியின் 10வது சீசன் நாளை (செப்டம்பர் 6-ம்) பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. இந்த முறை ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி திருவிழா கொண்டாட்டத்தை மையமாகக் கொண்ட புதிய தீமில் உருவாக்கப்பட்டுள்ளது.

சரி வாங்க போட்டியாளர்களை பார்ப்போம்!

முதலாவதாக ரிவியூவர் பிரசாந்த் பெயர் இடம்பெற்றுள்ளது. இரண்டாவது போட்டியாளராக ஆஸ்மிதா, 3 வது போட்டியாளராக பாண்டியன் ஸ்டோர்ஸில் நடித்த சின்னதிரை நடிகர் குமரன், 4 வது போட்டியாளராக மகாநதி சீரியலில் நடிக்கும் சின்னத்திரை நடிகை லட்சுமி பிரியா, 5 வது போட்டியாளராக தென்றல் வந்து என்னைத் தொடும் என்னும் சீரியலில் நடித்த சின்னத்திரை நடிகர் வினோத் பாபு மற்றும் 6 வது போட்டியாளராக அங்காடி தெரு மற்றும் பாகன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகர் பிளாக் பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டி எப்படி நிகழும், என்ன மாதிரியான டாஸ்க் இடம்பெறும் என்று அனைவரும் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *