சென்னை:
CALM MIND WELLNESS CENTRE வில்லிவாக்கத்தில் திருமதி. சுமதி பழனி அவர்கள் நடத்தி வருகிறார். அதில் பல்வேறு வகுப்புகள் நடத்தி வருகிறார்கள். அது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
அதில் திருமதி. சுமதி பழனி மற்றும் தலைமை பயிற்சியாளர் திருமதி. ஈஸ்வரி அவர்கள் இருவரும் கூறுகையில்:
குழந்தைகளுக்கு இரண்டு நாள் வகுப்பில் மூன்றாவது கண் நிச்சயம் திறக்கும். அப்படிப்பட்ட சிறந்த பயிற்சியை நாங்கள் கொடுத்து வருகிறோம். இசையால் குழந்தைகளின் மூளையில் ஏற்படும் மாற்றத்தை பெற்றோர்கள் நன்கு அறிவார்கள். உங்கள் குழந்தையின் மூளைத் திறனைத் தூண்டுங்கள்! மன அழுத்தத்திற்கு விடை கொடுங்கள்!
CALM MIND WELLNESS CENTRE Be Kind to Your Brain – Calm Mind. Clear Focus. Confident Future
இன்றைய வேகமான உலகில் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மன அமைதி, கவனத்திறன், நினைவாற்றல் மற்றும் உணர்ச்சி சமநிலை மிகவும் அவசியம். இந்த நோக்கத்துடன் செயல்படும் CALM Mind Wellness Centre, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான முழுமையான மனநலம் மற்றும் நல்வாழ்வு பயிற்சிகளை வழங்குகிறது.
எங்கள் சிறப்புப் பயிற்சிகள்:
– Brain Gym & Brain Yoga – கவனம், ஒருங்கிணைப்பு மற்றும் கற்றல் திறனை ஊக்குவிக்க.
– Focus & Memory Activities – கவனப் பயிற்சி மற்றும் நினைவாற்றல் வளர்ச்சிக்கு.
– Yoga & Mudra – உடல், மன ஒருமைப்பாட்டை வளர்க்க.
– Sound Meditation & Singing Bowl – ஓய்வு மற்றும் மன அமைதிக்காக.
– Breathing & Stress Management – மன அழுத்தத்தைக் கையாள உதவும் பயிற்சிகள்.
– Blindfold Activities – உணர்வு விழிப்புணர்வு, கவனித்தல் மற்றும் நம்பிக்கையை ஆராயும் செயல்பாடுகள்.
– Trataka Kriya – முறையான வழிகாட்டுதலுடன் கவன ஒருமுகப் பயிற்சி.
குழந்தைகளின் திறமைகளை ஊக்குவிக்கவும், பெரியவர்கள் மன அழுத்தத்தைக் கையாளவும், அன்றாட வாழ்வில் அமைதியான மனநிலையை வளர்க்கவும் எங்களுடன் இணையுங்கள். “சிறந்த எதிர்காலத்திற்கு, அமைதியான மனமும் விழிப்புணர்வான சிந்தனையும் அவசியம்!” என்று கூறினார்கள்.
பத்திரிகையாளர்கள் முன்னிலையில் குழந்தைகளின் கண்களை கட்டி கொண்டு எதிரில் இருப்பவர் செய்யும் செய்கைகளை செய்ய வைத்தார்கள். மேலும் கண்களை மூடி, வீணை வாசித்தல், கலர் சொல்லுதல் போன்றவை வியக்க வைத்தது.
குழந்தைகளின் பெற்றோர்கள் கூறுகையில்:
எங்கள் குழந்தைகளை சரியான இடத்தில் சேர்த்துள்ளோம், இப்போது நன்கு படிக்கிறார்கள், மனநிலையில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது, என்று கூறி இருவருக்கும் நன்றி தெரிவித்தனர்.