ஜெயிலர் 2 படத்தை பார்க்க காசாகிராண்ட் நிறுவனம் செய்த செயல்!

அலுவலகப் பணிகளுக்கு நடுவே, தலைவர் படத்தைக் கொண்டாட ஒரு சிறப்பான தருணம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Jailer 2 திரைப்படத்தின் உற்சாகத்தைத் தனது ஊழியர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வகையில், இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான காசாகிராண்ட், பல்வேறு நகரங்களில் 3,500-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்காக முதல் நாள் முதல் காட்சி (FDFS) திரையிடல்களை ஏற்பாடு செய்து மகிழ்வித்துள்ளது.

தலைமுறை தலைமுறையாகத் திரையுலக ரசிகர்களுக்கு ரஜினிகாந்தின் திரைப்பட வெளியீடு என்பது வெறும் திரைப்படம் பார்க்கும் நிகழ்வாக இருந்ததில்லை. எதிர்பார்ப்பு, கொண்டாட்டம், ஆரவாரம் எனப் பல உணர்வுகளைத் தன்னகத்தே கொண்டிருப்பதுடன், தலைவரைத் திரையில் காணும் உற்சாகமும் இதில் அடங்கியுள்ளது.

ரசிகர்களிடையே நிலவும் இந்தப் பொதுவான ஆர்வத்தை முன்னிறுத்தி, வழக்கமான பணிகளுக்கு நடுவே, ஊழியர்களுக்கான சிறப்பான அனுபவமாக Jailer 2 திரைப்படத்தின் உற்சாகத்தை காசாகிராண்ட் கொண்டுவந்துள்ளது. இந்தியத் திரையுலகின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெளியீடுகளில் ஒன்றான இந்தத் திரைப்படத்தை, தனது ஊழியர்கள் ஒன்றிணைந்து கொண்டாடும் அனுபவமாக இந்நிகழ்வு மாற்றியுள்ளது.

இந்த முன்னெடுப்பு, சக ஊழியர்கள் தங்களது அன்றாடப் பணிகளிலிருந்து சிறிது நேரம் ஓய்வெடுத்து, பொதுவான ஆர்வத்தின் மூலம் ஒருவருக்கொருவர் நெருக்கமாகி, மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது.

பல்வேறு நகரங்களில் 3,500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றுள்ள இந்தத் திரையிடல்கள், திரையுலகக் கொண்டாட்டத்தையும் ஒரே அணியாக இணைந்திருப்பதன் மகிழ்ச்சியையும் ஒன்றிணைக்கின்றன. இத்தகைய அனுபவங்கள் உற்சாகமான பணிச்சூழலை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதையும் இது வலியுறுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *