நுரையீரல் செயலிழப்பு கிளினிக்! பிரபு ஸ்பேஷாலிட்டி மருத்துவமனையில் துவக்கம்

பொள்ளாச்சி:

Fortis ஹெல்த்கேர் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான, சென்னை பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள க்ளென்ஈகிள்ஸ் மருத்துவமன, தனது விரிவான நுரையீரல் சிகிச்சை சேவைகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக, தொடங்கியுள்ள நுரையீரல் புற நோயாளிகள் பிரிவு மையத்தை பிரபு ஸ்பேஷாலிட்டி மருத்துவமனையில் துவங்கி உள்ளது.

பிறந்த குழந்தைகளில் காணப்படும் மரபணு கோளாறுகளில் இருந்து, வயது வந்தோருக்கான நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை வரை அனைத்து வயதினருக்குமான முழுமையான நுரையீரல் சிகிச்சையை உயர் திறன் கொண்ட மருத்துவ மையமாக இந்த புற நோயாளிகள் பிரிவு மையம் திகழ்கிறது.

நுரையீரல் நோய்களை மதிப்பீடு செய்வதற்கும், சிகிச்சை அளிப்பதற்குமான புதிய உயர் திறன் கொண்ட மருத்துவமனையான க்ளென்ஈகிள்ஸ் மருத்துவமனை நுரையீரல் புற நோயாளிகள் பிரிவு மையத்தை பிரபு மருத்துவமனையில் தொடங்கி வைத்துள்ளனர்.

பொது மக்கள், நுரையீரல் சிறப்பு சிகிச்சை தேவைப்படுவோர், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவோர், இரண்டாவது opinion தேவைப்படுவோர் பயன் பெரும் வகையில் இந்த பிரிவு அமைய பிரதி மாதம் க்ளென்ஈகிள்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் சிறப்பு மருத்துவர் விமி வர்கீஸ் பொள்ளாச்சி பிரபு மருத்துவமனைக்கு மாதம் தோறும் வருகை தருகின்றார்.

பொள்ளாச்சி சுற்றுப்புற நுரையீரல் பிரச்சினை உள்ள மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இந்த நுரையீரல் செயலிழப்பு clinic அமைய பெற வேண்டும். நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை சென்னை Gleneagles மருத்துவமனையில் தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பிட்டு திட்டத்தில் செய்யப்படும், என்று மருத்துவர் கூறினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *